Home நாடு நாடாளுமன்றத்திலிருந்து 6 மாதங்களுக்கு கிட் சியாங் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்திலிருந்து 6 மாதங்களுக்கு கிட் சியாங் இடைநீக்கம்!

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளையும் மீறி தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, ஜசெக மூத்த தலைவரும், கேலாங் பாத்தா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், அது குறித்து தொடர்ந்து எழுந்து நின்று கேள்வி எழுப்பினார்.

அவரை அமரும் படி அவைத்தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், அதனை மறுத்த லிம் கிட் சியாங் தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்த காரணத்தால், லிம் கிட் சியாங்கை, 6 மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்ய பண்டிகார் அமின் மூலியா உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

கிட் சியாங் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அங்கிருந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நிலுவையில் இருக்கும் வழக்கு காரணமாக தொகுதி எல்லை சீர்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் அதையும் மீறி ஏன் இன்று இந்த மசோதா தாக்கல்  செய்யப்படுகின்றது என்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.