Home நாடு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!

973
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இத்தீர்மானத்தின் படி, கோலாலம்பூரில் எதிர்கட்சிகளின் வலுவான பிடியில் இருக்கும் 10 தொகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அவற்றில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வாரின் லெம்பா பந்தாய் தொகுதியும் அடங்குகிறது. தொகுதிகள் எல்லை சீர்திருத்தத்தின் படி, அத்தொகுயில் தாசிக் பெர்டானா தொகுதியில் 6,500 வாக்காளர்கள் இணைகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், கெப்போங், பத்து, வாங்சா மாஜு, செகாம்புட், சித்தியவாங்சா, புக்கிட் பிந்தாங், செப்புத்தே, செராஸ் மற்றும் பண்டார் துன் ரசாக் ஆகிய தொகுதிகளும் மாற்றங்களைச் சந்திக்கின்றன.