Home இந்தியா இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு சாதனை!

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு சாதனை!

1190
0
SHARE
Ad

சென்னை – தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையிலான 10 காவல்துறையினர், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை, 33 கி.மீ பாக்நீரிணையை, 12.24 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்திருக்கின்றனர்.

காவல்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்களுடன் சைலேந்திரபாபு (நடுவில்)

தனுஷ்கோடியை வந்தடைந்த அவர்களை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் மேள தாளங்களுடன் வரவேற்றனர்.

57 வயதான சைலேந்திர பாபு இச்சாதனையைப் புரிந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice