மண்டாலே – மியன்மார் நாட்டின் புதிய அதிபராக யு வின் மியிண்ட் இன்று புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்பு, அதிபராக இருந்த 71 வயதான யு ஹிடின் கியாவ் கடந்த வாரம் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய அதிபர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
66 வயதான யு வின் மியிண்ட் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
மியன்மாரைப் பொறுத்தவரையில், அதிபராக யு வின் மியிண்ட் பதவி வகித்தாலும் கூட, மக்கள் தலைவரான ஆங் சான் சூ கி தான் முதல் நிலைத் தலைவராகச் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.