Home நாடு இவானாவுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க தம்பதி!

இவானாவுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க தம்பதி!

1139
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 2017 டிசம்பர் மாதம் 7-ம் தேதி, டச்சு நாட்டைச் சேர்ந்த அழகி இவானா ஸ்மித், கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்றின் 14-வது மாடியிலிருந்து விழுந்து, 6 மாடியில் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில், இவானா ஸ்மித்தின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இவானா தங்கியிருந்த, ஜாலான் டாங் வாங்கியில் உள்ள அந்த ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு அமெரிக்கத் தொழிலதிபர் அலெக்ஸ் ஜான்சன் (வயது 44) என்பவருக்குச் சொந்தமானது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் வர்த்தகம் செய்து வரும் அலெக்ஸ், தனது மனைவி லூனா மற்றும் 5 வயது மகளுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாலம்பூரில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், அலெக்சும், அவரது மனைவி லூனாவும், இவானா ஸ்மித்துடன் தாங்கள் உடலுறவு வைத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

நவம்பர் மாதம் ஒருமுறையும், இவானா இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான டெய்லி மெயிலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் உள்ள இரவு விடுதி ஒன்றில், இவானாவை அலெக்சும், லூனாவும் முதன் முதலாகச் சந்தித்திருக்கின்றனர்.

அதன் பின்னர், அவருடன் தொடர்ந்து நட்புறவோடு பழகி வந்த அவர்கள் இருவரும், உடலுறவும் கொண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இவானா மரணமடைந்த டிசம்பர் 7-ம் தேதிக்கு முதல் நாள் இரவு, மதுபான விருந்து ஒன்றில் மூவரும் கலந்து கொண்டதாக அலெக்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

அங்கு, இவானா போதை மருந்து எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் அதிகாலையில் மூவரும் தங்களது அடுக்குமாடிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே, அலெக்ஸ் மனைவி லூனா கூறியிருக்கும் தகவலில், “எனது மகள் தூங்கி எழுந்தவுடன், அவரை பள்ளிக்கு கிளப்பினேன். பின்னர் நானும், மகளும், இவானாவும் காலை உணவு எடுத்தோம். அதன் பின்னர் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது, இவானாவும் எனது கணவரும் படுக்கையில் இருந்தனர். எனது கணவர் உறக்கத்திலிருந்தார். இவானா விழித்திருந்தார்.

“அதன் பின்னர் இவானாவும், நானும் உடலுறவு கொண்டோம். பின்னர் எனக்கு மிகவும் அசதியாக இருந்ததால், உறங்கிவிட்டேன். கண்விழித்துப் பார்த்த போது, இவானாவின் ஆடைகள், காலணிகள் மற்றும் செல்பேசி இருந்தது. அவர் எனது உடைகளைப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து மீண்டும் உறங்கிவிட்டேன்.

“அதன் பின்னர் காவல்துறையினர் வந்து கதவைத் தட்டி எழுப்பிய பின்னர் தான் இவானா இறந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. இவானா இறந்துவிட்டதை நினைத்தால் இப்போதும் எனக்கு கைகள் நடுங்குகின்றன. எங்களுக்கும் இவானா மரணத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கப் போராடி வருகின்றோம்” என்று லூனா கூறியிருக்கிறார்.