Home நாடு பக்காத்தான் வெற்றி பெற 85 % குறையாத வாக்குப்பதிவு தேவை: மகாதீர்

பக்காத்தான் வெற்றி பெற 85 % குறையாத வாக்குப்பதிவு தேவை: மகாதீர்

781
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றியடைய வேண்டுமென்றால், 85 விழுக்காட்டிற்குக் குறையாத அளவில் வாக்குப்பதிவுகள் தேவை என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று திங்கட்கிழமை தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலை ஒப்பிடுகையில், இம்முறை அந்த இலக்கை அடைந்துவிட முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் 84.8 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“மலாய் சுனாமி தேவை. அப்போது தான் நடக்கும். மிகப் பெரிய பெரும்பான்மையை பக்காத்தான் பெற வேண்டும்” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

“சிறிய அளவிலான பெரும்பான்மை ஏற்பட்டால், அது தேசிய முன்னணி வாக்குத் திணிப்பு செய்ய வழி வகை செய்துவிடும். காரணம் தேசிய முன்னணி இந்த தேர்தலில் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் தன்வசம் வைத்திருக்கிறது.

“மறுவாக்கு எண்ணிக்கை ஏற்பட்டு, அரசாங்க கட்சியான அது தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும். குறிப்பாக தபால் வாக்குகளில் மோசடி மாற்றங்களைச் செய்யும் வாய்ப்பு உள்ளது” என்று மகாதீர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.