Home நாடு மிக விரைவில் அந்த ‘சிறப்புநாள்’ – பொதுத்தேர்தல் குறித்து நஜிப் கருத்து!

மிக விரைவில் அந்த ‘சிறப்புநாள்’ – பொதுத்தேர்தல் குறித்து நஜிப் கருத்து!

792
0
SHARE
Ad

பெரா – பொதுத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், ‘ராயா’ மிக அருகில் தான் இருக்கிறது. எனவே, விளக்கு ஏற்ற நேரம் வந்துவிட்டது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சூட்சமாகத் தெரிவித்திருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை ஃபெல்டா அடுத்த தலைமுறை வீடமைப்பைத் துவக்கி வைத்த நஜிப், “இன்று நான் ஃபெல்டா மக்களைச் சந்திக்கிறேன். புதன்கிழமை அரசாங்க ஊழியர்களையும், மற்றவர்களையும் சந்திக்கிறேன். அதன் பின்னர் சரவாக், மிரிக்கு செல்கிறேன். 7-ம் தேதி, தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்கிறேன்.

“அப்படியென்றால், ‘ராயா’ மிக அருகில் வந்துவிட்டது. எனவே ஹரிராயாவின் போது கிராமப் பகுதிகளில் விளக்கு ஏற்றுவது போல், நீங்களும் எண்ணெய் விளக்குகளை ஏற்ற நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, வரும் ஏப்ரல் 7-ம் தேதி, தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்வதால், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிடும் என பிரதமர் துறை அமைச்சர் ரஹ்மான் டாலான் ஆரூடம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 படம்: முகமது நஜிப் துன் ரசாக் டுவிட்டர்