கோலாலம்பூர் – இவ்வார இறுதியில் மலேசிய நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என பிரதமர் துறை அமைச்சரும், தேசிய முன்னணியின் வியூக, தகவல் தொடர்பு இயக்குநருமான ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார்.
“நமது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், அந்த வாய்ப்பு உள்ளது. காரணம், வழக்கமாக தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு தான் அறிவிக்கப்படும். அது தான் பாரம்பரியம்.
“(ஆனால்) நஜிப் (இந்த ஆண்டு) அதே முறையைப் பின்பற்றப் போகிறாரா? என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை” என்று ரஹ்மான் டாலான் கூறியிருக்கிறார்.
மேலும், அடுத்த வாரத்தில் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் ரஹ்மான் டாலான், வரும் ஏப்ரல் 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் கடைசிக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.