Home இந்தியா நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு!

நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழப்பு!

957
0
SHARE
Ad

மதுரை – நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த மார்ச் 31-ம் தேதி, மதுரையிலிருந்து 10 நாட்கள் நடைபயணத்தைத் தொடங்கினார்.

அப்போது, விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனைப் பார்த்த வைகோ அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

#TamilSchoolmychoice

அதன் பின் கூட்டத்தில் பேசிய வைகோ, தொண்டரின் இந்த செயல் குறித்துப் பேசி கண்ணீர் விட்டு அழுதார்.

அத்தொண்டரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கும் படி கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், 99 சதவிகிதம் தீக்காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.