Home இந்தியா அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம்!

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம்!

928
0
SHARE
Ad

சென்னை – சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம், கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதி நிறைவடைந்தது.

எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

பெங்களூரு ஐஐடி இயக்குனராக 6 ஆண்டுகள் பணியாற்றிய எம்.கே.சூரப்பா, இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அத்துடன், 150 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், உலோக பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.