அல்ஜீரிய இராணுவ விமானம் ஒன்று அந்நாட்டின் தலைநகர் அருகே புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில், 10 விமானப்பணியாளர்கள் உட்பட 257 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு அல்ஜீரிசில் உள்ள பௌபாரிக் இராணுவ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அவ்விமானம் அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் என்னவென்று தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
அல்ஜீரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து என அறிவித்திருக்கும் அல்ஜீரிய அரசு, 3 நாட்களுக்கு தேச முழுவதும் துக்கம் அனுசரிக்கும் படி அறிவித்திருக்கிறது.
இறந்தவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் என அல்ஜீரிய தற்காப்பு அமைச்சு கூறியிருக்கிறது.