Home நாடு மின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில் கலைஞர்களின் சித்திரை & விஷூ கொண்டாட்டம்!

மின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில் கலைஞர்களின் சித்திரை & விஷூ கொண்டாட்டம்!

839
0
SHARE
Ad

மின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில், இன்று கலைஞர்களின் சித்திரை & விஷூ புத்தாண்டு கொண்டாடத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக மலர்கிறது.

கலைஞர்களின் புத்தாண்டு வாழ்த்துகளோடு மலேசிய பாடல்களின் சிறந்த ஜந்து பாடல்கள் தொகுப்பு, கலை வட்டார செய்திகள் என நேயர்களை மகிழ்ச்சிப்படுத்த போகிறது.

“இது போதும் என்று எப்பொழுதும் நாம் நினைக்ககூடாது. புதிய விஷயங்களை, அது இசை துறையாக இருக்கட்டும், வேற எந்த துறையாக இருந்தாலும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் சிறந்து விளங்க முடியும். அதே நேரத்தில் பாடும்போது அதில் மனம் லயித்து முழு மனதோடு செய்ய வேண்டும்” இப்படி சொல்லிருக்கின்றார் அகில மலேசிய மலையாளி சங்க தலைவரும், நாடரிந்த பிரபலமான கலைஞருமான டத்தோ சுசிலா மேனன்.

#TamilSchoolmychoice

இவரின் கலைத்துறை சுவாரசியமான அனுபவங்களை மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள போகின்றார். ஆர்.டி.எம் வளர்த்த கலைஞர்களில் இவரும் ஒருவர். இவரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அனுபவங்கள் மற்றும் வாழ்த்து செய்தியையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள போகின்றார். ஆக, இன்றைய மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சியை பிற்பகல் மணி 12 தொடக்கம் 2 மணி வரை நேயர்கள் கேட்கலாம்.

இன்று மண்ணின் நட்சத்திரத்தில் உங்களை சந்திக்கிறார் அறிவிப்பாளர் ஹாரி. கலை வட்டார செய்திகள், கலைஞர்களின் படைப்புகளான குறுந்தட்டு வெளியீடு, திரைப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  மலேசிய கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”