இந்த நிதியின் படி, ஒவ்வொரு டேக்சி ஓட்டுநரும் தலா 800 ரிங்கிட்டுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ளலாம்.
“இந்த நாட்டில் ஈ-ஹெய்லிங் சேவைகளின் வரவால், உங்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும்.
“இதனை உணர்ந்த பின்னர், அரசாங்கம், நாடெங்கிலும் உள்ள 67,000 டேக்சி ஓட்டுநர்களுக்கு, தலா 800 ரிங்கிட் கொண்ட 1மலேசியா டேக்சி உதவி அட்டைகளை வழங்குகிறது” என நேற்று சிலாங்கூர் செர்டாங்கில் கூட்டம் ஒன்றில் நஜிப் அறிவித்தார்.
Comments