மதுரை – அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், அதிரடித் திருப்பமாக சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நிர்மலா தேவி வழக்கைத் தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றது.
அதன் படி, அவர் பணியாற்றிய தேவாங்கர் கலைக் கல்லூரியில் தொடங்கி நிர்மலா தேவியின் குடும்பத்தினர் வரையில் 7 குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நிர்மலா தேவியின் செல்போன் அழைப்புகளின் படி, அவர் சென்னை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்திருக்கிறது.
அந்த அதிகாரி இதற்கு முன்பு விருதுநகரில் பணியாற்றியதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
தற்போது சிபிசிஐடி விசாரணைப் பட்டியலில் அந்த அதிகாரியும் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.