Home இந்தியா நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து – வழக்கறிஞர் தகவல்!

நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து – வழக்கறிஞர் தகவல்!

1233
0
SHARE
Ad

மதுரை – மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணையில் இந்த விவகாரத்தில் அவர் பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லியிருப்பதாகத் தெரிகின்றது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நிர்மலா தேவியின் செல்பேசியில் நிறைய முக்கியப் பிரமுகர்களுடனான தொடர்புகள் குறித்து ஆதாரங்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று புதன்கிழமை மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,

“சிறைக்குள் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அசாதாரண சூழல் நிலவுவதாக நிர்மலா தேவி என்னிடம் தெரிவித்தார். தான் பேசிய அந்த ஆடியோவில் ஆங்காங்கே எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் நிர்மலா கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “அருப்புக்கோட்டையில் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக தன்னை வைத்து கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்றதாகவும் தெரிவித்தார். நான் அவரை சந்தித்தபோது, அருகில் ஜெயிலரும், வார்டனும் இருந்ததால் அதிகம் பேச முடியவில்லை. சிபிசிஐடி விசாரணையின் போது மீண்டும் அவரை சந்தித்துப் பேசுவேன்” என்றும் பாலசுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.