Home இந்தியா மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு: ஆசிரியை நிர்மலாவுடன் முக்கியப் பிரமுகர்கள் சிக்குகிறார்கள்!

மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு: ஆசிரியை நிர்மலாவுடன் முக்கியப் பிரமுகர்கள் சிக்குகிறார்கள்!

1046
0
SHARE
Ad

மதுரை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் குரல் பதிவு ஒன்று வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில், நிர்மலா தேவிக்கு எதிராக அருப்புக்கோட்டையில் போராட்டங்கள் நடந்ததையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, நிர்மலா தேவி பேசிய அந்தக் குரல் பதிவில், ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு செல்லும் அளவிற்கு தனக்கு முக்கியப் பிரமுகர்கள் தெரியும் என்றும், அவர்கள் மூலமாக தேவையான நிதியுதவி, கல்லூரி தேர்வில் அதிகப்பட்ச மதிப்பெண்கள் மற்றும் இன்னும் பல வசதிகளைப் பெற்றுத்தர முடியும் என்றும் அம்மாணவிகளுக்கு ஆசை வார்த்தை காட்டினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நிர்மலா தேவி கூறிய அந்த முக்கியப் பிரமுகர்கள் யார்? என்பதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும்படி, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருக்கிறார்.