Home நாடு தேர்தல் 14: பாகான் டத்தோவில் சாஹிட்டுக்கு எதிராக ராஜா போமோ போட்டி!

தேர்தல் 14: பாகான் டத்தோவில் சாஹிட்டுக்கு எதிராக ராஜா போமோ போட்டி!

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக ராஜா போமோ இப்ராகிம் மாட் சின் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து இப்ராகிம் மாட் ஜின் கூறுகையில், “நான் பாகான் டத்தோ தொகுதியைச் சேர்ந்தவன். எந்த ஒரு ஆதாயத்திற்காகவும் தேர்தலில் நிற்கவில்லை. எனது தொகுதி மக்களுக்கு உண்மையாக சேவையாற்ற விரும்புகின்றேன். நான் நாடாளுமன்ற உறுப்பினரானால் எனது சம்பளம் முழுவதையும் இனபாகுபாடு இன்றி ஏழை மக்களுக்குக் கொடுப்பதோடு, எனது சொத்துகளையும் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, பாகான் டத்தோ தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி, 3 பொதுத்தேர்தல்களிலும் சாஹிட் ஹமீடி அத்தொகுதியில் வெற்றி பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.