Home இந்தியா பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்!

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்!

858
0
SHARE
Ad

சென்னை – அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகளை தவறான வழியில் அழைத்துச் செல்லத் தூண்டியதற்கான குரல் பதிவு சிக்கியது.

இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பேசிய குரல்பதிவில் ஆளுநர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.