கோலாலம்பூர் – சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஜோகூர் வாசிகள், வரும் மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் அன்று, தங்களது நிறுவனம் விடுமுறை கொடுக்கவில்லை என்றால் வாக்களிக்க வர வேண்டாம் என துணைப் பிரதமர் சாஹிட் கூறியதாக கடந்த சனிக்கிழமை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
சாஹிட்டின் இந்தக் கருத்திற்கு மலேசியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சாஹிட் கூறிய கருத்தை மலேசியாகினி திரித்துக் கூறியிருப்பதாக பிசிஎம் (Parti Cinta Malaysia) கட்சித் தலைவர் ஹுவான் செங் குவான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“சாஹிட்டின் கருத்து மிகத் தெளிவாக இருக்கிறது. சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்கள், வாக்களிப்பதற்காக வருவதும், வராததும் அவரவர் விருப்பம். அரசாங்கம் இதில் எப்போதுமே ஜனநாயக முறைப்படி தான் நடந்து கொள்கிறது. வாக்களிப்பது அவரவர் உரிமை” என்று ஹுவான் செங் குவான் கூறியிருக்கிறார்.
மேலும், பொய் செய்திகள் சட்டம் 2018-ஐ மலேசியாகினி மீறிவிட்டதாகவும் ஹுவான் செங் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதனிடையே, சாஹிட் கூறியதற்கான ஒலிப்பதிவு ஆதாரத்தை மலேசியாகினி வெளியிட்டிருக்கிறது. அதனை இங்கே காணலாம்: