Home நாடு பாஸ் கூட்டணி 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி – ஹாடி அறிவிப்பு!

பாஸ் கூட்டணி 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி – ஹாடி அறிவிப்பு!

786
0
SHARE
Ad
Hadi Awang PAS President
பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்

கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி, நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி தலைமையிலான காகாசான் செஜாத்ரா கூட்டணி, 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீஇஸ்கண்டாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஹாடி அவாங், 2013 பொதுத்தேர்தலில், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 73 தொகுதிகளில் போட்டியிட்டோம். மே 9 பொதுத்தேர்தலில் இன்னும் கூடுதலான இடங்களில் போட்டியிடவிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

“இறைவன் கருணையால், நாங்கள் (பாஸ் மற்றும் அதன் கூட்டணிகள்) ஏறக்குறைய 160 தொகுதிகளில் போட்டியிடுவோம்” என்று ஹாடி அவாங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பாஸ் கட்சிக்குத் தற்போது நாடெங்கிலும் 196 தொகுதிகளில், ஏறக்குறைய 1 மில்லியன் உறுப்பினர்கள் இருப்பதாகவும் ஹாடி அவாங் குறிப்பிட்டார்.