புத்ராஜெயா – 4,700 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கெட்கோ நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் தாமரை நிறுவனம் தான் என கூட்டரசு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியதோடு, குடியேற்றக்காரர்களின் மனுவை 20,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.
கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி துன் முகமட் ரவுஸ் ஷாரிப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், குடியேற்றக்காரர்களின் வழக்கறிஞரான ஆர்.கெங்காதரன் கூறுகையில், “இந்த வழக்கு இத்தோடு முடியப்போவதில்லை. நாங்கள் மீண்டும் மற்றொரு வழக்குத் தொடர்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.