Home நாடு ‘கெட்கோ’ விவகாரத்தில் 69 வயது நபர் கைது!

‘கெட்கோ’ விவகாரத்தில் 69 வயது நபர் கைது!

1201
0
SHARE
Ad

MACCசிரம்பான் – நெகிரி செம்பிலானில் உள்ள கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தது.

கிரேட் அலோனியர்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன்ஸ் (Great Alonioners Trading Corporation Bhd -Gatco) என்ற நிறுவனம் மேற்கொண்ட இந்த நிலத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் வாக்குமூலம் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் அவர் முக்கிய சந்தேக நபராகவும் கருதப்படுகிறார்.