Home நாடு சமயப்பள்ளி தீ சம்பவம்: முக்கியத் தகவல்கள் கசிந்தது எப்படி?

சமயப்பள்ளி தீ சம்பவம்: முக்கியத் தகவல்கள் கசிந்தது எப்படி?

875
0
SHARE
Ad

Tahfiz fireகோலாலம்பூர் – கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள இஸ்லாம் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 2 ஆசிரியர்கள், 21 மாணவர்கள் பலியாகினர்.

இந்நிலையில், இச்சம்பவம் ஒரு விபத்து அல்ல, இளைஞர்கள் சிலரின் திட்டமிட்ட செயல் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்தது.

#TamilSchoolmychoice

இத்தகவல்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே வெளியே கசிந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் காவல்துறை, தகவல் எப்படி கசிந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.