Home நாடு பேங்க் நெகாரா நஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டது: மகாதீர்

பேங்க் நெகாரா நஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டது: மகாதீர்

857
0
SHARE
Ad

MAHATHIR_MOHAMED - 1கோலாலம்பூர் – அந்நியச் செல்வாணியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து பேங்க் நெகாரா மீண்டுவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைகள், பேங்க் நெகாராவில் நஷ்டம் குறித்து அல்ல என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

“இது நிதியை இழந்ததற்காக அல்ல. காரணம் பேங்க் நெகாரா அதிலிருந்து எப்போதோ மீண்டுவிட்டது. மீண்டதோடு மட்டுமல்ல, தற்போது அதன் சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள் ஆகும்.”

#TamilSchoolmychoice

“ஞாபகப்படுத்திப் பாருங்கள்.. பேங்க் நெகாரா 5 மில்லியன் ரிங்கிட் நிதியைக் கொண்டே தொடங்கப்பட்டது. தற்போது அது 100 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் உள்ளது. எனவே என்ன சொல்லப் போகிறீர்கள்? பேங்க் நெகாரா தோற்றுவிட்டது என்றா?” என்று மகாதீர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.