Home இந்தியா அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!

அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!

947
0
SHARE
Ad

stalin-mk-dmkசென்னை – டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர், அடுத்த அதிரடியாக, தடை செய்யப்பட்ட ‘குட்கா’ பொருளை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்த காரணத்திற்காக, திமுகவின் 20 சட்டமன்ற உறுப்பினர்களை அதிரடியாகத் தகுதி நீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே, நீதிமன்ற வழக்கு ஒன்றை திமுக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதற்கான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் இந்த விசாரணைகள், சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்ததாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அடுத்த அதிரடியாக 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலம், சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டமிட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.