இலண்டன் – உலகப் புகழ் பெற்ற காற்பந்து விளையாட்டாளரும், இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவருமான (கேப்டன்) வேய்ன் ரூனி குடிபோதையில் கார் ஓட்டியக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கார் ஓட்ட முடியாது என்ற தடை விதிக்கப்பட்டதோடு, 100 மணி நேர சமூக சேவை செய்யவேண்டும் என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஒரு பெண்ணுடன் அவர் குடிபோதையில் இலண்டனில் கார் ஓட்டியபோது அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டிய கார் காவல் துறையினரால் நிறுத்தப்பட்டு அவர் மீது போதை அளவுக்கான பரிசோதனை நடத்தப்பட்ட போது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக அவர் மதுபோதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட ரூனி அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.