Home நாடு பேராவில் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

பேராவில் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

870
0
SHARE
Ad

PDRMகோலாலம்பூர் – பேராக் மாநிலம் பாகன் செராயில் கைது செய்யப்பட்ட 3 ஐஎஸ் தீவிரவாதிகளிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் தாய்லாந்தில் இருந்து எம்16, ஏகே47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி மற்றும் கையெறிகுண்டு ஆகியவற்றை வாங்கி, மலேசியாவில் உள்ள இஸ்லாம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பேராக் மாநிலத்தில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், 21 வயதான அந்நபர் உட்பட அம்மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் மலேசியா, தாய்லாந்தில் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தளங்களில் இத்தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஒருவேளை, தாய்லாந்தில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வரமுடியாத பட்சத்தில், கத்தி மூலமாகத் தாக்குதல் நடத்தவும் அவர்கள் மூவரும் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கின்றது.