Home உலகம் நவம்பரில் இந்தோனிசிய அதிபரின் மகள் திருமணம்!

நவம்பரில் இந்தோனிசிய அதிபரின் மகள் திருமணம்!

685
0
SHARE
Ad

2014813jokowi (bbc co uk) bஜகார்த்தா – வரும் நவம்பர் மாதம் இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோவின் மகள் காஹியாங் ஆயுவின் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோகா வெளியிட்டார்.

தற்போது போகோர் வேளாண்மைக் கல்லூரியில் படித்து வரும் ஜோகாவின் மகள் காஹியாங்கிற்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பாபி ஆஃபிப் நாசுஷனுக்கும், கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும், வரும் நவம்பர் 8-ம் தேதி, சுராகார்த்தாவில் உள்ள ஜோகாவின் தனிப்பட்ட பங்களாவில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருமண ஏற்பாடுகள் மற்றும் செய்தியாளர்களுக்கு அறிக்கைகள் கொடுப்பது என அனைத்துப் பணிகளையும் தனது மூத்த மகன் ஜிப்ரான் பார்த்துக் கொள்வார் என்றும் ஜோகோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.