Home உலகம் இந்தோனிசிய-ஆஸ்திரேலிய தலைவர்கள் சைக்கிள் ஓட்டத்திற்கிடையே பேச்சு வார்த்தை

இந்தோனிசிய-ஆஸ்திரேலிய தலைவர்கள் சைக்கிள் ஓட்டத்திற்கிடையே பேச்சு வார்த்தை

566
0
SHARE
Ad

ஜாகர்த்தா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்  அந்தோனி அல்பானிசும், இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவும் தங்கள் இருநாடுகளின் நல்லுறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.

அண்டை நாடான இந்தோனிசியாவுக்கு ஆஸ்திரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் வருகை மேற்கொண்டிருக்கிறார் அந்தோனி அல்பானிஸ்.

இருநாட்டுத் தலைவர்களும் சைக்கிள் ஓட்டிக் கொண்டே தங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தனர்.

#TamilSchoolmychoice

அந்தோனி அல்பானீஸ் இந்தோனேசியாவுடனான உறவுகளைப் பாராட்டினார். கடந்த மாதம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்தோனிசியாவுக்கு மேற்கொண்ட தனது முதல் இருதரப்பு பயணத்தில் இருநாடுகளின் நல்லுறவை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார்,

மரியாதை அணிவகுப்புக்குப் பின்னர் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைநகர் ஜகார்த்தாவின் தெற்கே போகோரில் உள்ள அதிபர் மாளிகையில் அல்பனிசுக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்.

“இந்தோனேசியாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு எங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். நாங்கள் புவியியலால் மட்டும் இணைக்கப்படவில்லை, விருப்பத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்” என்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அல்பானிஸ் கூறினார்.

இந்தோனேசியா உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என்றும் அவர் கணித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு இந்த வட்டாரத்தின் அமைதிக்கும் செழிப்புக்கும் பங்களிக்கும் என்று விடோடோ கூறினார்.