Home நாடு 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் ‘ராஜா போமோ’ இப்ராகிம் மாட் ஜின்!

14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் ‘ராஜா போமோ’ இப்ராகிம் மாட் ஜின்!

803
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் மாயமான போது, மலேசிய விமான நிலையத்தில், சிறப்பு சடங்குகள் நடத்தி, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், 14-வது பொதுத்தேர்தலில் களமிறங்கவிருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடுகிறார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மஞ்சோய் சட்டமன்றத் தொகுதியில், ராஜா போமோ போட்டியிடக்கூடும் என ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

‘டத்தோ மகாகுரு’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், வித்தியாசமான சடங்குகளை நடத்தி அடிக்கடி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவர்.

கடந்த ஆண்டு வடகொரியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்ட போது அதற்கென்று பிரத்தியேக சடங்கு ஒன்றைச் செய்து தான் வடகொரியாவை வசியப்படுத்தப் போவதாக ராஜா போமோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகி காவல்துறையால் கைதும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.