Home நாடு பேராக்கில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி

பேராக்கில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி

466
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் முதல் கட்டமாக பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை மஇகா அறிவித்துள்ளது. 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா போட்டியிடும் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்தார்.

தெலுக் இந்தான், சுங்கை சிப்புட், தாப்பா ஆகியவையே அந்த 3 நாடாளுமன்றத் தொகுதிகளாகும். இதில் தாப்பாவில் சரவணனும், சுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுக் இந்தான் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுவரை அங்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த டத்தோ டி.முருகையாவுக்கு அங்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக்கில் மஇகா போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளில் புந்தோங் தொகுதியில் ஜெயகோபி போட்டியிடுவார் என்பது மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு தொகுதிகள் எவை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

அந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.