Home நாடு ரோஸ்மாவிடம் மன்னிப்பு கேட்டார் நுருல் இசா

ரோஸ்மாவிடம் மன்னிப்பு கேட்டார் நுருல் இசா

936
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்னை மரியாதையின்றி பெயர் சொல்லி அழைக்கிறார் என பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் குறைபட்டுக் கொண்டதை அடுத்து, அன்வார் இப்ராகிமின் மகளும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நுருல் இசா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரச்சனைகள், விவகாரங்கள் அடிப்படையில்தான் தான் விவாதங்களை முன்னெடுப்பதாகவும், மாறாக தனிப்பட்ட மனிதர்கள் குறித்துப் பேசுவதை எப்போதும் தான் தவிர்த்து வந்திருப்பதாகவும் நுருல் இசா கூறினார்.

சிறு குழந்தை முதல் நுருல் இசாவைத் தான் அறிந்திருப்பதாகவும் ரோஸ்மா தெரிவித்திருந்தார். தன்னை டத்தின்ஸ்ரீ என்றோ, அல்லது மலாய் இனத்தினர் மரியாதையாக மூத்த வயதுடைய பெண்களை அழைக்கும் விதமாக, ‘மாக் சிக்’ (Mak Chik) என்றோ, நுருல் தன்னை அழைக்காமல், மாறாக பெயர் சொல்லி ஆணவத்தோடு அழைக்கிறார் என ரோஸ்மா குறை கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த நுருல் இசா, தனது தாயார் வான் அசிசாவும், ரோஸ்மா மன்சோரும் துங்கு குர்ஷியா கல்லூரியில் படித்தவர்கள் என்பதையும்  நினைவுபடுத்தியுள்ளார்.