Home நாடு முன்னாள் தேர்தல் ஆணையர் பெர்சாத்து சார்பில் கோத்தா லாமாவில் போட்டி!

முன்னாள் தேர்தல் ஆணையர் பெர்சாத்து சார்பில் கோத்தா லாமாவில் போட்டி!

791
0
SHARE
Ad
டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், கிளந்தானின் கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதியில், பெர்சாத்து கட்சி சார்பில் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார்.

பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவராகப் பதவி வகித்து வரும் அப்துல் ரஷீட், கோத்தா பாரு கிளையின் தலைவராவார்.

கோத்தா லாமாவில் தான் போட்டியிடவிருப்பதை நேற்று வெள்ளிக்கிழமை அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பின் போது கிளந்தான் ஜசெக தலைவர் சுவா சின் சுய்யும் உடன் இருந்தார்.

கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றங்களில் கோத்தா லாமாவும் ஒன்று.

64 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 34 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 2 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 1 விழுக்காடு மற்ற இனத்தவர்களையும் கொண்டிருக்கும் கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 தேர்தல்களாக தொடர்ந்து பாஸ் கட்சி வெற்றி பெற்று வந்திருக்கிறது.

கடந்த 13-வது பொதுத்தேர்தலில், பாஸ் வேட்பாளர் அனுவார் டான் பி அப்துல்லா, மசீச வேட்பாளர் டான் கென் டென்னை 6,618 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.