Home நாடு ஜோகூர் மாநிலத்தின் மஇகா வேட்பாளர்கள்!

ஜோகூர் மாநிலத்தின் மஇகா வேட்பாளர்கள்!

826
0
SHARE
Ad
(இடமிருந்து) ரவின், கண்ணன், டாக்டர் சுப்ரா, அசோஜன், வித்தியானந்தன்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.

சிகாமாட் நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் போட்டியிடுகின்றார்.

காம்பீர் சட்டமன்றத்தில் டத்தோ எம்.அசோஜனும், கஹாங் தொகுதியில் டத்தோ எம்.வித்தியானந்தனும், தெங்காரோ தொகுதியில் ரவின் கிருஷ்ணசாமியும் மீண்டும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

மஇகாவுக்குப் புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் டத்தோ எஸ்.கண்ணன் போட்டியிடுகின்றார்.

இன்று திங்கட்கிழமை காலை ஜோகூர் பாருவில் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதங்களை மாநில மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் மஇகா வேட்பாளர்கள் ஐவரும் கலந்து கொண்டனர்.