Home உலகம் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3-வது குழந்தை ஆண்!

இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3-வது குழந்தை ஆண்!

1273
0
SHARE
Ad
பிரசவத்திற்காக கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மத்திய இலண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையின் முன்பு குழுமியிருக்கும் பத்திரிக்கையாளர்கள் (படம்: நன்றி – கென்சிங்டன் பேலஸ் டுவிட்டர் பக்கம்)

இலண்டன் – இளவரசர் சார்லஸ்-அமரர் டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு பிறந்திருக்கும் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியை பிரிட்டனின் அரச மாளிகை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளமான கென்சிங்டன் பேலஸ் தளத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று பிரிட்டன் நேரப்படி காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டன் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்றும், குழந்தை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் எடை இருந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதியர் (கோப்புப் படம்)

இளவரசி கேட் மிடில்டனின் பிரசவ நேரத்தின்போதும் இளவரசர் வில்லியமும் உடனிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த மகிழ்ச்சியான தகவல் எலிசபெத் மகாராணியார் உள்ளிட்ட அரச குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஏற்கனவே, வில்லியம்-மிடில்டன் தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.