Home வாழ் நலம் டுரியான் பழம் – சத்து பட்டியல்

டுரியான் பழம் – சத்து பட்டியல்

3146
0
SHARE
Ad

durian

கோலாலம்பூர், மார்ச்-28- ‘பழங்களின் அரசன்’ என்ற பெயர் டுரியான் பழத்திற்கு உண்டு.

தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் டுரியான் பழத்தில் உள்ள சத்துக்களை காண்போம்.

#TamilSchoolmychoice

வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல டுரியான்  பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் டுரியான் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. ‘பிரக்டோஸ்’  மற்றும் ‘சுக்ரோஸ்’ எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கொழுப்புகளை கரைக்கும் சக்தி டுரியான் பழத்திற்கு உண்டு.  எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்த இப்பழம் மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கும் வல்லமை படைத்தது.

சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான ‘வைட்டமின் சி’  டுரியான் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

‘டிரிப்டோபான்’ எனப்படும் அமினோ அமிலம் டுரியான் பழத்தில் உள்ளது. இதனை ‘உறங்கும் மருந்து’ என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும்.  தூக்கத்தை தூண்டுவதிலும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

டுரியான்  பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம்.

இந்தோனேசியாவில் ‘சாயர்’ எனப்படும் டுரியான்  சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள டுரியான் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படுகிறது. ‘டுரியான்  சாஸ்’ செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் ‘இகான் பிரெங்கஸ்’ என்ற பெயரில் டுரியான்  சாஸ் பிரபலம்.

பழுக்காத டுரியான் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. டுரியான் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.