Home கலை உலகம் ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் என்னை நடிக்க வைத்தது சினேகா

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் என்னை நடிக்க வைத்தது சினேகா

821
0
SHARE
Ad

prasanna

சென்னை, மார்ச் 28-  ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் டாக்டராக நடித்திருக்கிறார் பிரசன்னா. அவருக்கு ஜோடியாக இனியா நடித்துள்ளார். இது பற்றி பிரசன்னா கூறியதாவது:-

பல கதாபாத்திரங்கள் கொண்ட  படங்களில் நிறைய நடித்து விட்டேன். இனி தனி கதாபாத்திரம் கொண்ட படங்களில்தான் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நேரத்தில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன், ‘மலையாள ‘டிராபிக்’கை தமிழில் மறுபதிவுசெய்கிறோம். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார்.

#TamilSchoolmychoice

அப்போது என் முடிவை அவரிடம் சொல்லி மறுத்துவிட்டேன். பிறகு சினேகா ‘டிராபிக்’ படம் பற்றியும் அந்தப் படத்தில் சொல்லப்படும் கருத்துகளைப்  பற்றியும் சொல்லி ‘கட்டாயம் அந்த படத்தில் சிறிய கதாப்பாத்திரத்திலாவது நடிக்க வேண்டும்’ என்றார்.பிறகுதான் நடித்தேன்.

நானே டாக்டர் கதாபாத்திரத்தை  தேர்ந்தெடுத்து நடித்தேன். இப்போது படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு படத்தில் என்னையும் இணைத்துக் கொண்டது பெருமையாக இருக்கிறது என்று பிரசன்னா கூறியுள்ளார்.