Home One Line P2 மாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா!

மாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா!

1117
0
SHARE
Ad

சென்னை: அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் மாஃபியா. இந்த திரைப்படம் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலமாக, கார்த்திக் நரேன் அறியப்படாத இயக்குனராக அறிமுகமாகி, அப்படத்தின் மூலமாக மிகவும் வேண்டப்படும் இயக்குனராக உருவாகியுள்ளார்.

மாஃபியா படத்திற்கு ஜேக்ஸ் பெஜோய் இசையமைத்துள்ள வேளையில், கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தினை லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். மாஃபியா திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று திங்கட்கிழமை வெளியானது.

இதில் தம்மை சிங்கமாக அருண் விஜய் சித்தரித்துக் கொள்ளும் வேளையில், தம்மை நரியாக பிரசன்னா சித்திரித்துள்ளார். இவ்விருவருக்கும் இடையிலான மோதலுடன் கூடிய புதிராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice