Home தேர்தல்-14 பெர்மாத்தாங் பாவில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நூருல் இசா!

பெர்மாத்தாங் பாவில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நூருல் இசா!

1150
0
SHARE
Ad

பெர்மாத்தாங் பாவ் – 14-வது பொதுத்தேர்தலில், பினாங்கு மாநிலம் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் நூருல் இசா அன்வார், அத்தொகுதி மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

பெர்மாத்தாங் பாவ் மக்களுடன், நூருல் இசா மற்றும் செபராங் ஜெயா பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஆஃபின் பஹாருடின்

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நூருல் இசாவை எதிர்த்து, தேசிய முன்னணி வேட்பாளர் முகமது சைடி பின் சையத்தும், பாஸ் வேட்பாளர் அப்னான் ஹமீமி பின் தாயிப் அசாமுடினும் போட்டியிடுகின்றனர்.

பிகேஆர் கட்சியின் வலுவான தொகுதிகளில் ஒன்றான பெர்மாத்தாங் பாவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் பிகேஆர் வசம் இருந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

13-வது பொதுத்தேர்தலில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்தார்.

அதன் பின்னர் ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வார் சிறைக்கு சென்ற பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அத்தொகுதியில் போட்டியிட்டு 8,373 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியை மீண்டும் தக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: டாக்டர் ஆஃபின் பகாருடின் டுவிட்டர்