Home தேர்தல்-14 “மகாதீர் மிகச் சிறந்த நடிகர்” – டுவிட்டரில் நஜிப் எரிச்சல்!

“மகாதீர் மிகச் சிறந்த நடிகர்” – டுவிட்டரில் நஜிப் எரிச்சல்!

914
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவுபெற்றிருக்கும் நிலையில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதங்களும், சூடான கருத்துப் பரிமாற்றங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீரை தனது டுவிட்டரில் வசைபாடியிருக்கிறார்.

“இதற்கு முன்னர், அன்வாருக்கு எதிராக நம்பமுடியாத அளவில் தாக்குதல் நடத்தினார். என்னால் அதை திரும்பக் கூட சொல்ல முடியவில்லை. ஆனால் அண்மைய காலமாக, எதுவுமே நடக்காதது போல் அங்கு சென்றுவிட்டார் (அன்வாருடன்). சிறந்த நடிகர்!” என நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நேற்று மகாதீர் தனது டுவிட்டரில் வெளியிட்ட காணொளி ஒன்றில், அனைவருக்காகவும் இந்த நாட்டை மீண்டும் சீரமைக்கப்போகிறேன் எனக் கண்ணீருடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.