Home கலை உலகம் வருகிறது ‘பிக்பாஸ் சீசன் 2’ – தொகுப்பாளர் யார் தெரியுமா?

வருகிறது ‘பிக்பாஸ் சீசன் 2’ – தொகுப்பாளர் யார் தெரியுமா?

1231
0
SHARE
Ad

சென்னை – விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய ‘பிக்பாஸ்’ என்ற சுவாரசியமான நிகழ்ச்சியின் தொடர்ச்சியான ‘பிக்பாஸ் 2’ மிக விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் வந்து காரசாரமாக வழி நடத்திய உலக நாயகன் கமல்ஹாசனே மீண்டும் அந்நிகழ்ச்சியை வழி நடத்தவிருக்கிறார்.

கடந்த முறை நடிகராக மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் ஆகியிருப்பதால், ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சிக்கு இப்போதே மக்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பத் தொடங்கிவிட்டது.

#TamilSchoolmychoice

நேற்று மே 3-ம் தேதி, ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சிக்காக நடந்த விளம்பரப் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, இந்நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.