Home தேர்தல்-14 மே 9 அன்று மின்சாரத் துண்டிப்பு ஏற்படலாம் – மொகிதின் கவலை!

மே 9 அன்று மின்சாரத் துண்டிப்பு ஏற்படலாம் – மொகிதின் கவலை!

1244
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று, இரவு 8 மணிக்கு, வாக்குகள் எண்ணப்படும் பொழுது மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்படலாம் எனக் கவலையடைவதாக பெர்சாத்து கட்சித் தலைவர் மொதியின் யாசின் தெரிவித்திருக்கிறார்.

“நான் கவலையடைகிறேன். 8 மணிக்கு விளக்குகள் அணைக்கப்படலாம்” என பாகோவில் இன்று வெள்ளிக்கிழமை மொகிதின் தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் காம்பீர் தொகுதியில் போட்டியிடும் மொகிதின் யாசின், தான் அத்தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அன்றே மின்சாரத் துண்டிப்பை அனுபவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice