Home தேர்தல்-14 “தேசிய முன்னணி வெற்றி பெற்றால் ஷாரிசாட் ஜாலில் மீண்டும் அமைச்சர்” – சாஹிட்

“தேசிய முன்னணி வெற்றி பெற்றால் ஷாரிசாட் ஜாலில் மீண்டும் அமைச்சர்” – சாஹிட்

1061
0
SHARE
Ad

பாகான் டத்தோ – அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவியான டான்ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில், தேசிய முன்னணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றால், மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை சாஹிட் போட்டியிடும் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சாஹிட் இதனை அறிவித்தார்.

அம்னோவின் மகளிர் அணித் தலைவியான ஷரிசாட்டுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டாலும், தொடர்ந்து அவர் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

ஒரு செனட்டராக நியமிக்கப்பட்டு, அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படலாம் என சாஹிட் கோடி காட்டியுள்ளார்.

“நானே ஷரிசாட் அமைச்சராக நியமிக்கப்பட பிரதமர் நஜிப்புக்கு சிபாரிசு செய்வேன்” என்றும் சாஹிட் கூறியிருக்கிறார்.