Home தேர்தல்-14 மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

970
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மலேசியக் குடிமகன்கள் தங்களது கையில் அடையாள அட்டை இல்லையென்றாலும் கூட ஓட்டுநர் உரிமத்தையோ, கடப்பிதழையோ காட்டி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறுகையில், வாக்காளர்கள் தங்களது புகைப்படம், பெயர், முகவரி, அடையாள அட்டையின் எண் ஆகியவற்றைக் கொண்ட ஓட்டுநர் உரிமம் அல்லது அனைத்துலகக் கடப்பிதழைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “அனைவரின் வாக்களிப்பும் இரகசியமாக வைக்கப்படும். வாக்காளர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. வாக்காளர்களாக மற்றவர்களிடம் தெரிவித்தால் மட்டுமே அது தெரியவரும்” என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா பெர்னாமாவிடம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“வாக்குச்சீட்டுகளில் அடையாள அட்டை எண்கள் இருக்காது. பொதுமக்களின் தகவலுக்காகக் கூறுகிறேன். வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒருவேளை கட்சிகள் மறு எண்ணிக்கைக்கு மேல்முறையீடு செய்யலாம் என்பதால், அவை 21 நாட்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும்” என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா கூறியிருக்கிறார்.