Home நாடு மஇகா பிரமுகர் பீடோர் ஜெயராமன் காலமானார்

மஇகா பிரமுகர் பீடோர் ஜெயராமன் காலமானார்

909
0
SHARE
Ad
பீடோர் ஜெயராமன்

கோலாலம்பூர் – மஇகாவின் பழம் பெரும் பிரமுகர்களில் ஒருவரான பீடோர் ஜெயராமன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 மே 2018-ஆம் நாள் கோலாலம்பூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னாரின் நல்லுடல் கீழ்க்காணும் அவரது கோலாலம்பூர் இல்ல முகவரியில் நாளை செவ்வாய்க்கிழமை (8 மே) காலை வரை வைக்கப்பட்டிருக்கும்:

No: 8, Persiaran Batu Hampar Taman Batu View,

#TamilSchoolmychoice

Off Jalan Ipoh, 68100 Kuala Lumpur 

அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் அவரது பூர்வீக நகரான பீடோருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் காலை 10.30 மணி முதல் நடைபெறும்:

No: 40-A, Taman Sri Bunga

35500 Bidor, Perak

பீடோர் நகரை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமன் துன் சம்பந்தன் காலத்தில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதன் பின்னர் மஇகாவில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, கிளைத் தலைவராக சேவையாற்றி வந்ததோடு, அவ்வப்போது, அரசியல், சமூக விவகாரங்களில் தனது கருத்துகளையும் பதிவு செய்து வந்தார்.

பழகுவதிலும், தனது இல்லத்தில் விருந்துபசரிப்புகள் நடத்துவதிலும், அவரது பண்புகளும், குணநலன்களும் மிகவும் அனைவரையும் கவர்ந்தவையாகும்.