Home தேர்தல்-14 செவ்வாய் இரவு 10 மணி: நஜிப் டிவி3-யிலும், மகாதீர் ஃபேஸ்புக்கிலும் நேரலையில் தோன்றுவர்!

செவ்வாய் இரவு 10 மணி: நஜிப் டிவி3-யிலும், மகாதீர் ஃபேஸ்புக்கிலும் நேரலையில் தோன்றுவர்!

1100
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டிவி3-யிலும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது பேஸ்புக்கிலும் நேரலையில் தோன்றி உரையாற்றவிருக்கின்றனர்.

இது குறித்து தேசிய முன்னணி பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறுகையில், மலேசியர்களும், தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் நாளை இரவு 10 மணியளவில் நஜிப்பின் உரையைக் கேட்கும் படி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சையத் சித்திக் சையத் அப்துல் ரஹ்மான் வெளியிட்டிருக்கும் தகவலில், நாளை இரவு மகாதீர் பேஸ்புக் நேரலையில் தோன்றி மக்கள் முன் உரையாற்றுவார் என்றும், நாடு முழுவதும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், 222 நாடாளுமன்றங்களிலும் ஒரே நேரத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், இரவு 10 மணியளவில் மகாதீரின் உரையைக் கேட்பதற்காக அவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் சையத் சித்திக் தெரிவித்திருக்கிறார்.