Home தேர்தல்-14 ராய்ஸ் யாத்திம்: ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் மேடையேறினார்

ராய்ஸ் யாத்திம்: ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் மேடையேறினார்

1053
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம்

ஜெலுபு – இதுநாள்வரையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், முதன் முறையாக தனது முன்னாள் தொகுதியான ஜெலுபு நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (மே 7) மேடையேறி பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தார்.

அம்னோவுக்கு எதிரானக் கருத்துகளைக் கூறியதற்காக ராய்ஸ் யாத்திம் மீது ஒழுங்கு நடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.