Home தேர்தல்-14 தேர்தல்-14: யாருக்கு ஆதரவு? தொழிற்சங்கக் காங்கிரசில் தலைமைத்துவ மோதல்!

தேர்தல்-14: யாருக்கு ஆதரவு? தொழிற்சங்கக் காங்கிரசில் தலைமைத்துவ மோதல்!

1206
0
SHARE
Ad
மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி – படத்தில் இருப்பவர் ஜே.சோலமன்

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் நாட்டின் 14 மில்லியன் தொழிலாளர்களும் மாற்றத்திற்காக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் ஜே.சோலமன் இன்று செவ்வாய்க்கிழமை (8 மே) பிற்பகலில் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் சோலமனின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை விடுத்த தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சோர், தாங்கள் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு ஆதரவளிப்பதாகவும், தொழிலாளர் நலன்களுக்காக அவர் நிறைய செயல்கள் ஆற்றியிருப்பதாகவும் அறிவித்தார்.

சோலமன் தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில்தான் அந்த அறிக்கை விடுத்தாரே தவிர, தொழிற்சங்கக் காங்கிரசின் சார்பாக அல்ல என்றும் விளக்கியுள்ள அப்துல் ஹாலிம், இணைய ஊடகங்கள் சோலமனின் அறிக்கையைத் திரித்துக் கூறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். வங்கி ஊழியர்கள் சங்கத்தில் 20 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

எனினும் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம், சோலமன் விடுத்த அறிக்கை, மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் அதிகாரபூர்வ கடிதத்தில் வெளியிடப்பட்டது என்றும் தேசிய வங்கி ஊழியர்களின் சங்கம் குறித்த எந்த விவரமும் அந்த அறிக்கையில் காணப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.