Home One Line P1 ‘கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே போதுமானது, கடன் தள்ளுபடியை அமல்படுத்துங்கள்’

‘கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே போதுமானது, கடன் தள்ளுபடியை அமல்படுத்துங்கள்’

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள எம்40, பி40 மற்றும் சிறிய நடுத்தர வணிகங்களுக்கு வங்கி கடன் தள்ளுபடியை மீண்டும் கொண்டுவருவதற்கான அழைப்பை இனியும் புறக்கணிக்க வேண்டாம் என்று தேசிய வங்கி ஊழியர் சங்கம் (என்யூபிஇ – NUBE) நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் அப்துல் அசிசை வலியுறுத்தியுள்ளது.

சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதால், குறைந்த வருமானக் குழுக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் தீர்வு காண அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும் என்று என்யூபிஇ பொதுச் செயலாளர் ஜே. சாலமன் ஓர் அறிக்கையில் கூறினார்.

” தற்போதைய நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காரணமே போதுமானது. இனி காரணத்தை வழங்குவதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“கொவிட் 19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட , பி 40 மற்றும் எம் 40 மற்றும் சிறிய நடுத்தர வணிகங்களில் உள்ள அனைவருக்கும் தள்ளுபடி விதிக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தையும் வங்கிகளையும் வற்புறுத்துகிறோம். எந்தவொரு தாமதமும் இன்றி இந்த தள்ளுபடி காலத்தை மீண்டும் நிலைநிறுத்த அரசாங்கத்தை ஊக்குவிக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.