Home One Line P1 பினாங்கில் இனி நெகிழிப் பை 1 ரிங்கிட்!

பினாங்கில் இனி நெகிழிப் பை 1 ரிங்கிட்!

1114
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஜனவரி 1 முதல் வணிக வளாகங்களில்  நெகிழிப் பையை பெற முயற்சித்தால், அதற்காக 1 ரிங்கிட்டை மாநில அரசு வசூலிக்கும்.

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் மட்டுமே நெகிழிப் பையை பெற முடியும்.

திங்கள் முதல் புதன்கிழமை வரை, பெரும்பாலான கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக மையங்கள் நெகிழிப் பைகளை வழங்காது.

#TamilSchoolmychoice

மாநில சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் பீ பூன் போ நேற்று மாநில சட்டமன்றத்தில் இதை அறிவித்தார்.

2009 முதல், பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் ஒரு நெகிழி பையின் விலையை 20 சென் என வசூலித்தனர். மேலும் இந்த பணம் சுற்றுச்சூழல் துறையின் முயற்சிகளுக்கு நிதியளிக்க மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது.

2009- ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும், 8.9 மில்லியன் ரிங்கிட் சேகரித்ததாக அரசு அறிவித்தது.